முகப்பு /செய்தி /தேனி / மறைந்த தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்

மறைந்த தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்

ஓபிஎஸ் தாயார் மறைவு

ஓபிஎஸ் தாயார் மறைவு

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி வந்தார்.  தனது தாயாரின் உடலைப் பார்த்தும் காலை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம். அருகில் இருந்த குடும்பத்தினர் அவரை தேற்றினர்.

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)

First published:

Tags: O Pannerselvam, OPS, Theni