முகப்பு /செய்தி /தேனி / ஓ.பி.ரவீந்திரநாத் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலக தயார்.. ஆர்.பி.உதயகுமார் சவால்

ஓ.பி.ரவீந்திரநாத் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலக தயார்.. ஆர்.பி.உதயகுமார் சவால்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நடத்தியது தர்மயுத்தம் எனவும், தற்போது நடத்துவது துரோக யுத்தம் எனவும், ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஓ.பி.ரவீந்திரநாத் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலக தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதை கண்டித்து, தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் உடன், இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மின்சார கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசை காட்டிலும், ஓ.பன்னீர் செல்வத்தையே கடுமையாக விமர்சித்து பேசினார். தேனியில் கூட்டத்தை கூட்ட முடியுமா என ஓபிஎஸ் தரப்பு சவால் விட்டதோடு, அங்கு வந்தால் கொலை செய்யப்படுவீர்கள் எனவும், மிரட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மக்கள் செல்வாக்கு இல்லாத ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தான் அரசியலில் இருந்து விலக தயார் எனவும், ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நடத்தியது தர்மயுத்தம் எனவும், தற்போது நடத்துவது துரோக யுத்தம் எனவும், ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

First published:

Tags: ADMK, R.B.Udhayakumar