Home /News /theni /

குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே மோதல்... ஒருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே மோதல்... ஒருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

தேனியில் இரு தரப்பினரிடையே மோதல்

தேனியில் இரு தரப்பினரிடையே மோதல்

Theni district News : தேனி அருகே குப்பை கொட்டியதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியான நிலையில், அங்கே பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி அருகே குப்பை கொட்டியதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் பிடிக்கும் வரை இறந்தவரின் சடலத்தை வாங்கப்போவதில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்படடது.

    தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பூதிப்புரம் கிராமத்தில் நேற்று மாலை குப்பை கொட்டியதில் இரு சமூகத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அதில் ஒரு பிரிவை சேர்ந்த மகேஸ்வரகுமார் என்பவர் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் மற்றும் 2பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக இறந்தவரின் மகள் அளித்த புகாரில், எதிர் தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணன் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் இறந்தவரின் சடலத்தை வாங்கப்போவதில்லை எனவும் கூறி,  உறவினர்கள் பூதிப்புரம் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Must Read : ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம் கண்டுபிடிப்பு - உற்சாகத்தில் ஆய்வாளர்கள்

    அப்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் பிடித்து விடுவதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பூதிப்புரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - பழனிகுமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Dispute, Murder, Police, Theni

    அடுத்த செய்தி