முகப்பு /செய்தி /தேனி / ஓபிஎஸ் தாயார் உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

ஓபிஎஸ் தாயார் உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

ஓபிஎஸ் தாயார் உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

ஓபிஎஸ் தாயார் உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

OPS Mother : ஓபிஎஸ் தாயார் உடலுக்கு திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின்  தாயார் ஓ.பழனியம்மாள் (95) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பெரியகுளம் அக்கிரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் தாயார் உடலுக்கு  உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும்  பல்வேறு கட்சியினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், திமுக சார்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஓபிஎஸ் தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.‌ அப்போது அவருடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுகவினர் மறைந்த பழனியம்மாள் உடலுக்கு மலர் வளையம் மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஓ.பன்னீர்செல்வத்தின்  தாயார் பழனியம்மாளின் உடலுக்கு திமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். மேலும் தாயாரை இழந்து வாடும் அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்” என கூறினார்.

செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

First published:

Tags: OPS, Theni