தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்து போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 20ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (34). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 15வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர், மகாலிங்கத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளி மகாலிங்கத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 15,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி திலகம் தீர்ப்பளித்தார்.
செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child marriage, Pocso, POCSO case, Theni