முகப்பு /செய்தி /தேனி / சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும் குச்சனூர் கோவில் - இங்கு வருவோருக்கு ஏற்படும் நன்மைகள்!

சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும் குச்சனூர் கோவில் - இங்கு வருவோருக்கு ஏற்படும் நன்மைகள்!

சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும்  குச்சனூர் கோவில்

சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும் குச்சனூர் கோவில்

மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான காகம் பொம்மைகளை வாங்கி காணிக்கையாக செலுத்தியும், எள் சாதம் படைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வரருக்கு அமைந்துள்ள தனி கோவில் இதுவாகும். இந்த கோவிலை பற்றிய சிறப்பு தொகுப்பை பார்ப்போம்.

நேர்த்திக்கடன்: 

இந்த ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கும் பிறகு, சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலிப்பார்.  இந்த திருவிழாவின் போது,  தினமும் ஏராளமான பக்தர்கள் தோஷங்கள் தீரவும், வளமான வாழ்வு பெறவும், கோவிலில் நேர்த்திக்கடன்  செலுத்துவது வழக்கம்.

சாமி தரிசனம்: 

இந்த கோவிலில், மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான காகம் பொம்மைகளை வாங்கி காணிக்கையாக செலுத்தியும், எள் சாதம் படைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்துடன், கோவில் அருகில் உள்ள சுரபி நதியில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

திருக்கல்யாணம்: 

திருக்கல்யாணம்,  சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக் காப்பு சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சனி பகவானின் அருளைப் பெறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தோஷம் நீங்கி கிடைக்கும் நன்மைகள்:

top videos

    சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெறவும்,  தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இங்கிருக்கும் சனி பகவானின் துணை வேண்டுமென்றும் கூறுகின்றனர் மேலும், இங்கே குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரங்களும் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.

    First published:

    Tags: Temple, Theni