ஹோம் /நியூஸ் /தேனி /

மேகமலை வனப்பகுதிகளில் தொடர் மழை.. சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - படையெடுக்கும் மக்கள்

மேகமலை வனப்பகுதிகளில் தொடர் மழை.. சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - படையெடுக்கும் மக்கள்

சின்ன சுருளி

சின்ன சுருளி

Theni News : நீர் வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  மேகமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சின்னசுருளி அருவி, மேகமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

  நீர் வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

  இதையும் படிங்க : இன்னும் 2 நாட்கள்.. 7 மாவட்டங்களை குறி வைத்த கனமழை.. வானிலை மையத்தின் அலெர்ட்!

  குடும்பம் குடும்பமாக சின்னசுருளி அருவிக்கு படையெடுக்கும் மக்கள் குதூகலமாக குளித்து மகிழ்கின்றனர்.‌ மேலும் அருவியில் உண்டான நீர் வரத்தால், சின்னசுருளி அருவி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் சுமார் 25 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

  Published by:Karthi K
  First published:

  Tags: Theni