ஹோம் /தேனி /

சாலையில் துணிகளைத் துவைத்து, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் - 3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்..

சாலையில் துணிகளைத் துவைத்து, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் - 3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்..

Protest

Protest

Theni District: கூடலூரில் சாலையில் துணிகளைத் துவைத்து நூதன முறையில் சலவைத் தொழிலாளர்களும், விவசாய சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அமையவிருக்கும் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தின் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சலவை தொழிலாளர்களும், விவசாய சங்கத்தினரும் சாலையில் துணிகளை துவைத்தும், நாற்றுகள் நட்டும், ஒப்பாரி வைத்தும் 3 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  உண்ணாவிரத போராட்டம் :-

  தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் 1296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகருக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை பொதுப் பணித்துறையினர் கடந்த சில தினங்களாக கூடலூர் குருவனூத்து பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர் கூடம் அருகே திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டப்பணியை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளர்கள், விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை செய்தனர். குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தொடர் உண்ணாவிரத

  போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள். இந்த போராட்டத்தில் சலவைத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  நூதன போராட்டம் :-

  தொடர்ந்து இத்திட்டத்தை அரசு கைவிட தவறினால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை அரசிடமே ஒப்படைத்து, நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறுவதாக சலவை தொழிலாளர்களும், விவசாயிகளும் கூறி உள்ளனர்.

  கூடலூர் வண்ணான்துறை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சலவைத் தொழிலாளர்கள் அப்பகுதியில் சலவை தொழில் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பு அணை கட்டப்பட்டால் வாழ்வாதாரம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சலவைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சலவைத் தொழிலாளர்களும் விவசாய சங்கத்தினரும், இன்று சாலையில் துணிகளை துவைக்கும் நூதன போராட்டத்தை நடத்தினார். மேலும் பந்தல் அருகே நாற்றுக்களை நட்டும், பெண்கள் ஒப்பாரி வைத்தும், பொது மக்களின் கவனம் பெற நூதன முறையில் போராடினார் . மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தினை தடை விதிக்க கோரி மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

  செய்தியாளர் : சுதர்ஸன்

  Published by:Arun
  First published:

  Tags: Gudalur, Theni