ஹோம் /நியூஸ் /தேனி /

ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஆண்டிபட்டி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி - மும்பை சென்று மோசடி நபரை கைது செய்த போலீஸ்

ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஆண்டிபட்டி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி - மும்பை சென்று மோசடி நபரை கைது செய்த போலீஸ்

ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் பண மோசடி

ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் பண மோசடி

Theni district News : வட மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஆண்டிபட்டி பெண்ணிடம் 4லட்சம் ரூபாய்  பண மோசடி, மும்பையை சேர்ந்த முதியவர், அவரது பெண் உதவியாளர் என இருவரை கைது செய்த  தேனி சைபர் க்ரைம்  போலீஸார் அவர்களிடம் இருந்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாரிஜாதம் (57).‌ வெளிமாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் வழக்கம் கொண்ட இவர், கடந்த ஏப்ரல் மாதம் வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்று தனக்கு தெரிந்த நபரின் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

  அப்போது செல்போனில் பேசிய நபர், ஷேத்ராம் டூர்ஸ் என்ற பெயரில் சென்னையில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருவதாகவும், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு ரயில் மூலமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் சென்று வருவதாக அறிமுகம் செய்துள்ளார். 72 நபர்கள் கொண்ட ஒரு ரயில் பெட்டியில் இந்த சுற்றுலா அழைத்துச் செல்ல முடியும் எனவும், இதற்கு முன் பணமாக தலா ஒருவருக்கு ரூ.3000  கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

  அதற்கு பதிலளித்த பாரிஜாதம், தன்னிடம் 109 நபர்கள் இருப்பதாக கூறவே, அப்படி என்றால் இரண்டு ரயில் பெட்டிகளை முன் பதிவு செய்ய வேண்டும் கட்டணத்தை உடனடியாக செலுத்துங்கள் என ஒரு வங்கிக் கணக்கை கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது 90 நபர்களிடம் தான் பணம் வசூலானது என 4,00,800 ரூபாயை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணைகளாக பாரிஜாதம் செலுத்தியுள்ளார்.

  அதற்கு மீதமுள்ள நபர்களின் பணத்தையும்  செலுத்தினால் தான் முன் பதிவு செய்ய முடியும், எனவே உடனடியாக பணத்தை கட்டுங்கள் எனக் கூறியுள்ளனர்.‌ அதன் பின்னர் பாரிஜாதத்தின் அலைபேசி அழைப்பை 10 நாட்களுக்கு மேலாக அந்த நபர் ஏற்காமல் இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உனர்ந்த பாரிஜாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், பாரிஜாதத்தை தொடர்பு கொண்ட அலைபேசி எண் மற்றும் பணம் செலுத்திய வங்கி கணக்கின் விவரங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.‌ அதனைத் தொடர்ந்து, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஹேமமாலினி (47) என்ற பெண்ணை கைது செய்தனர்‌.

  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையை சேர்ந்த நபர் ஒருவர்தான் இந்த வேலையை செய்யச் சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து மும்பை விரைந்த தனிப்படை சைபர் க்ரைம் போலீசார், கான்சூர் பகுதியில் தங்கியிருந்த வெங்கட் ரமண அய்யர் என்ற 60வயது முதியவரை கைது செய்தனர்.

  பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

  அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஐ‌.சி.டபிள்யூ படித்த பட்டயக் கணக்காளர் ஆவார். தனது பெயரை வரதராஜன் என்று மாற்றிக் கொண்டு ஆன்மீக சுற்றுலா உள்பட பல்வேறு இனைய தள மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவர் மீது சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட மோசடி குற்ற வழக்குகள நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு தேனி சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து வந்த காவல்துறையினர்  தொடர் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து ரூபாய் 4.36 லட்சம் பணத்தை வெங்கட் ரமண அய்யரிடம் இருந்து கைப்பற்றினர். மேலும் இருவரிடம் இருந்தும் 10-க்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள்,  ஆறு செல்போன்கள் உள்ளிட்டவற்றை மீட்டனர். அதனைத் தொடர்ந்து வெங்கட் ரமண அய்யர் மற்றும் அவருக்கு உதவிய ஹேமமாலினியையும் கைது செய்து, தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Must Read : இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திச்சென்ற கும்பல்... கும்பகோணத்தில் பரபரப்பு

  ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் நடந்துள்ள இந்த மோசடி சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இணையதளத்தில் வருகின்ற விளம்பரங்கள் மற்றும் அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் - பழனிகுமார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Cheating, Theni