ஹோம் /நியூஸ் /தேனி /

தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?

தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?

பூக்களின் விலை உயர்வு

பூக்களின் விலை உயர்வு

இன்றைய நிலவரப்படி தேனி  பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ  ரூபாய் 2,500க்கு விற்பனையாகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, சீலையம்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதியாகிறது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் தேனி, ஆண்டிபட்டி, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் பூ மார்க்கெட்டிற்கு வர்த்து குறைந்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Also see... மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது

இன்றைய நிலவரப்படி தேனி  பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ  ரூபாய் 2,500க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ - ரூ.1,000, பிச்சிப்பூ - ரூ.800, மெட்ராஸ் மல்லி - ரூ800க்கும் விற்பனையாகிறது. செவ்வந்தி ரூ.150க்கும், ரோஜா பூ 50க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து நாளை மறுதினம் திருமண முகூர்த்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வர உள்ள கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பூக்கள் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்தாலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பழனிக்குமார், தேனி

First published:

Tags: Local News, Theni