ஹோம் /நியூஸ் /தேனி /

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..! - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..! - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி

Theni | கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை வித்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பமாகி தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

  இந்நிலையில் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து பெய்யத் தொடங்கிய கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  Also see... ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

  அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து நீர் வரத்து சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும், அருவிக்கு அருகில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும் படி தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜா அறிவித்துள்ளார்‌.

  செய்தியாளர்: பழனிக்குமார், தேனி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Falls, Heavy rain, Theni, Tourist spots