ஹோம் /நியூஸ் /தேனி /

மோதலுக்குப் பிறகு முதல்முறையாக.. ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சென்ற இபிஎஸ்

மோதலுக்குப் பிறகு முதல்முறையாக.. ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சென்ற இபிஎஸ்

இபிஎஸ்ஸுக்கு வரவேற்பு

இபிஎஸ்ஸுக்கு வரவேற்பு

அதிமுக தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உடனான மோதலுக்கு பின் முதன்முறையாக தேனி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

அதிமுக தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே காரசார விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் அதிமுக பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

பெரியகுளம் - தேனி சாலையில் உள்ள மதுராபுரி பிரிவில் கரகாட்டம், தேவராட்டம், செண்டை மேளம், முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூர்ணகும்ப மரியாதை வழங்கினர்.

எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் தங்க வேல் பரிசாக வழங்கினர். அங்கு சிறிதுநேரம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்குவோம் என்றார்.

First published:

Tags: AIADMK, O Panneerselvam