Home /News /theni /

தேனி அருகே அதிகாலையில் 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு... பரபரப்பில் நாராயணத்தேவன்பட்டி கிராமத்தினர்..

தேனி அருகே அதிகாலையில் 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு... பரபரப்பில் நாராயணத்தேவன்பட்டி கிராமத்தினர்..

நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

Theni | தேனி அருகே அதிகாலையில் நாராயணத்தேவன்பட்டி கிராமத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது நாராயணத்தேவன்பட்டி கிராமம். அப்பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று பலத்த சத்தம் வந்ததை கேட்ட மக்கள் அலறியடித்து வீட்டுக்கு வெளியே  வந்து பார்த்தனர்.‌ அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டது தெரியவந்தது. உடனே அருகில் உள்ள இராயப்பன்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து தந்த காவல் துறையினர் வெடிகுண்டு வீசப்பட்ட இடங்களை பார்த்த பின்பு அது நாட்டு வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். உத்தமபாளையம் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் உண்டான அதிர்வால்  பலரது வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also see... மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...

    நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  ‌

    செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Boom blast, Theni

    அடுத்த செய்தி