ஹோம் /நியூஸ் /தேனி /

கம்பத்தில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம்.. சீறிப்பாய்ந்த மாடுகள் - பொதுமக்கள் உற்சாகம்

கம்பத்தில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம்.. சீறிப்பாய்ந்த மாடுகள் - பொதுமக்கள் உற்சாகம்

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த ஜோடி மாடுகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த ஜோடி மாடுகள்

Theni | தேனி அருகே பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 63ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்தன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஸ்ரீபகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு 63வது ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் இன்று நடைபெற்றது.  பூஞ்சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் மாடு, நடு மாடு , பெரிய மாடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் களம் கண்டன.

  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ரேக்ளா பந்தயத்தினர் இந்த போட்டியில் பங்கேற்றனர். கம்பம் நகரில் இருந்து 6 கி.மீ தூரமுடைய கம்பம் மெட்டு சாலையில் உள்ள எல்லையை சென்றடைந்து முதலில் கொடி வாங்கும் ஜோடி மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

  Also see...போக்சோ வழக்கில் தண்டனையை அறிவிக்கப்பட்டதும் தப்பி ஓடிய கைதி - நீதிமன்றத்தில் பரபரப்பு

  மேலும் வெற்றி பெற்ற வண்டி ஓட்டும் சாரதிகளுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த ஜோடி மாடுகளை சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Festival, Temple, Theni