தேனி கைலாசபட்டி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றிய விவகாரத்தில் அறநிலைதுறை அதிகாரிகள் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்களா என விளக்கம் கேட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தேனி பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலையில் அமைந்துள்ளது அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் ஆலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு இன்றி காணப்பட்ட இக்கோயிலை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஓபிஎஸ் குடும்பத்தினரே கைலாசநாதர் மலைக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர்.
இதையும் படிக்க : ''நீர்த்துப் போன மாண்டஸ் புயல்.. பில்டப் செய்யும் ஸ்டாலின்''- எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!
ஆனால் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருநாளில் அதற்கு தங்கதமிழ்செல்வன் மற்றும் திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஆகமவிதிப்படி கோயிலில் இருந்து ஜெயபிரதீப் எடுத்து வந்த தீபத்தால் கார்த்திகை தீபத்தை அர்ச்சகர் முதலில் ஏற்றினார்.
இதனை அடுத்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் அதிமுகவின் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தங்கதமிழ்செல்வன் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், அறநிலைய துறை அதிகாரிகள் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்களா என விளக்கம் கேட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayapradeep, O Pannerselvam, OPS