ஹோம் /நியூஸ் /தேனி /

தேனி மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் தெரியுமா? - வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

தேனி மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் தெரியுமா? - வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

மாதிரி படம்

மாதிரி படம்

Theni District News | தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் இன்று வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11,06,235 வாக்காளர்கள் உள்ளனர்.  01.01.2023 ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு இன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் இன்று வெளியிட்டார்.

பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியலை ஆட்சியர் வெளியிட பெரியகுளம் சார் - ஆட்சியர் சிந்து பெற்றுக்கொண்டார். அதேபோல் போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு பட்டியலை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் - தேதி, இடங்கள் அறிவிப்பு

இதில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1,34,566 ஆண் வாக்காளர்கள், 1,37,999 பெண் வாக்காளர்கள், 33 இதரர் என மொத்தம் 2,72,598 பேர் உள்ளனர். பெரியகுளம் தொகுதியில் 1,37,898 ஆண் வாக்காளர்கள், 1,43,262 பெண் வாக்காளர்கள், 104 இதரர் என 2,81,264 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

போடிநாயக்கனூரில் 1,32,587 ஆண் வாக்காளர்கள், 1,38,778 பெண் வாக்காளர்கள், 22 இதரர் என 2,71,387 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,37,360 ஆண் வாக்காளர்கள், 1,43,592 பெண் வாக்காளர்கள், 34 இதரர் என 2,60,986 பேர் உள்ளனர்.

ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5,42,411 ஆண் வாக்காளர்கள், 5,63,631 பெண் வாக்காளர்கள்,  இதரர் 193 பேர் என 11,06,235 வாக்காளர்கள் உள்ளனர். இதில் விடுபட்ட வாக்காளர்கள் இன்று முதல் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வரை அந்தந்த வாக்காளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் வாக்குச்சாவடி மறு சீரமைப்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலைக்கிராமத்தில் புதிதாக 1 வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 1,225 ஆக உயர்ந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி மதுரை சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் நிறைவடைந்தது.

செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni