Home /News /theni /

தேனி மாவட்ட மக்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இன்டர் நெட்டை பயன்படுத்தலாம்!

தேனி மாவட்ட மக்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இன்டர் நெட்டை பயன்படுத்தலாம்!

கோப்பு படம்

கோப்பு படம்

Theni | அலைக்கற்றைக்கான கண்ணாடி இழை வலையமைப்புத் திட்ட பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் சேவைகள் துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் நீரஜ் மித்தல், கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டத்தில்  தற்போது, அதிவேக பைப்பர் ஆப்டிக்கல் இன்டர்நெட் சேவை வழங்க திட்ட பணிகள் நடபெற்று வருகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையதள சேவையை பெற முடியும்.

இந்த திட்டம் குறித்து அறிவித்த மத்திய அரசு, கிராப்புறங்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை கம்பி வடம் இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 ஜி.பி.பி.எஸ் அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் டிஜிட்டல் சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளான தொலை பேசி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றை வழங்க இயலும்.

மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும். அதோடு, புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும். தமிழத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.

இதையும் வாசிக்க: Theni | கால், மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை- கம்பத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

மேலும் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார இ-சேவை மற்றும் ஊராட்சி இ-சேவை மையங்களில் செயல்படுத்தவுள்ள அதி வேக அலைக்கற்றைக்கான கண்ணாடி இழை வலையமைப்புத் திட்டம் செயல்படுத்தவுள்ளது குறித்து அரசு முதன்மை செயலர், கலெக்டர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து தேனி மாவட்டம் அம்பாசமுத்திரம், தப்புக்குண்டு, அரண்மனைப்புதூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள அதிவேக அலைக்கற்றைக்கான கண்ணாடி இழை வலையமைப்புத் (அதிவேக பைப்பர் ஆப்டிக்கல் இணையதள சேவை) திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் சேவைகள் துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் நீரஜ் மித்தல், கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Tamilnadu government, Theni

அடுத்த செய்தி