ஹோம் /நியூஸ் /தேனி /

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க முடியுமா? - வனத்துறை முக்கிய அறிவிப்பு

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க முடியுமா? - வனத்துறை முக்கிய அறிவிப்பு

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி

Theni district | தேனி மாவட்ட கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் வனத்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் இருந்து வரும் நீர் அருவியாக இங்கே பாய்ந்து ஓடுகிறது. வனப்பகுதியில் இருக்கும் இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாது, கேரள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் பெய் கன மழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கும்க்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பிறகு 20 நாட்களுக்கு பின்னரே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தற்போதும், கும்பக்கரை அருவிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நிலையில், சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் நீராடி சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து அருவியின் முன்புற கதவு அடைக்கப்பட்டது. நீர்வரத்து சீரான பிறகே அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

இதனால், ஆவலுடன் அங்கு வந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Theni