முகப்பு /செய்தி /தேனி / பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் காளை உயிரிழந்த சோகம்

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் காளை உயிரிழந்த சோகம்

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை

Jallikattu Bull Death | பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளையை அதன் உரிமையாளர் சோகத்துடன் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை மாடு  உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 7.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை காண நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாக வந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில்  இராயப்பன்பட்டியை சேர்ந்த தீபக் என்பவரது காளை போட்டியில் பங்கேற்றது.‌ வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை போட்டியில் பங்கேற்ற பின் ஜல்லிக்கட்டு மைதானத்தை அடுத்துள்ள காளைகள் பிடிக்கும் இடத்திற்கு ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓடி வந்த காளையின் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தரையில் அமர்ந்திருந்த காளையை அனைவரும் எழுப்பி பார்த்து பலனளிக்கவில்லை.‌  பின்னர் அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காளையை பரிசோதனை செய்தனர். ஆனால் கீழே விழுந்த காளை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த காளையை அதன் உரிமையாளர் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

செய்தியாளர்:  பழனிகுமார்

First published:

Tags: Jallikattu, Local News, Theni