தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். டொம்புச்சேரியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக சுயம்பாக தோன்றிய பத்திரகாளி அம்மனை வழிபட்ட மக்கள், நாள் போக்கில் கோவிலாக கட்டி பெரிய திருவிழாவாக கொண்டாடி பத்ரகாளியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
ஒரு வாரம் நடைபெறும் திருவிழாவில் அருகாமையில் உள்ள கிராம மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பத்ரகாளியம்மனை தரிசித்து செல்வர். பத்திரகாளியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்று விளங்கியதை தொடர்ந்து இந்த ஊருக்கு பத்ரகாளிபுரம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெறாத நிலையில் , இந்தாண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேனி மாவட்டத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான வீரபாண்டி திருவிழா போல இந்தத் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த மே 2ம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுப்பது தீச்சட்டி எடுத்தல் அம்மனுக்கு கிடா வெட்டுதல் பூக்குழி மிதித்தல் போன்ற பல்வேறு வகைகளில் நேர்த்தி கடனை செலுத்தினர். மே 7ஆம் தேதியுடன் திருவிழா நிறைவுற்றது.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.