ஹோம் /நியூஸ் /தேனி /

தேனி மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தடகள போட்டி

தடகள போட்டி

Theni District | தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெறவுள்ள தடகள போட்டிக்கான பயிற்சியாளர் பணி குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் தடகள போட்டிக்கான பயிற்சியாளர் பணி குறித்து, மாவட்ட கலெக்டர் முரளிதரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘விளையாடு இந்தியா’ திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை தடகள பயிற்சிக்கான ‘விளையாடு இந்தியா மாவட்ட மையம்’ தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு தகுதியான நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜனவரி 2023) 3ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அறியலாம். அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment, Local News, Sports, Theni