Home /News /theni /

ஒற்றைத்தலைமையில் இபிஎஸ்.. ஓபிஎஸ்-ன் போடி தொகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

ஒற்றைத்தலைமையில் இபிஎஸ்.. ஓபிஎஸ்-ன் போடி தொகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

இ.பி.எஸ் ஆதரவாளர்கள்

இ.பி.எஸ் ஆதரவாளர்கள்

Theni ADMK Celebration: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை வரவேற்று ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான தேனியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.

    சென்னையில் ஜூலை 11-ல் (நேற்று) நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் உள்ள இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இ.பி.எஸ் ஆதரவாளர்கள்


    தேனி அதிமுக நகர அவைத் தலைவர் முருகேசன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பில் கூடிய அதிமுகவினர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோசம் எழுப்பினர். பின் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see... சிங்கப்பூர் வேலை.. ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி

    செய்தியாளார்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: ADMK, EPS, OPS

    அடுத்த செய்தி