தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் தொடங்கி நாளை வரை 3 நாட்கள் நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாம் ஆர்.எஸ்.எஸ் கீழ் செயல்படும் பாரதிய பண்பாட்டுச் சேவா கேந்திரம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்படுவதால் அதனை தடை செய்யக்கோரி இன்று இடதுசாரி கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கும் அக்னிபத் திட்டத்திற்கான பயிற்சி முகாமை தேனியில் நடத்தக் கூடாது எனவும், அதனை தடுத்து நிறுத்தாத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, “ 130 கோடி மக்கள் தொகை வசிக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களை ஒப்பந்த முறையில் தேர்ந்தெடுப்பதை மக்கள் எதிர்க்கின்றனர். ராணுவ வீரர்களை வழக்கமாக தேர்ந்தெடுக்கும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் இதுவரை இருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சிகளும் தங்கள் இயக்கங்களை கல்லூரிகளில் வளர்த்தது இல்லை.
கல்விச் சாலைகளில் அரசியல் பேசக்கூடாது என்ற நடைமுறை இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் இந்த பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக தேனி மாவட்ட ஆட்சியரோ கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்குத்தான் இருக்கிறது எனவும், தமக்கு இல்லை எனக்கூறுவது ஏற்புடையதல்ல” என்றார். மேலும்,”மக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அக்னிபத் திட்டத்திற்கான பயிற்சி முகாம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட கல்லூரியை திரளாக முற்றுகையிடுவோம்” என எச்சரித்தார்.
Also see... ஓபிஎஸ் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர், ”மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடினார். மேலும் அதிமுகவில் அண்ணன் - தம்பிகள் போல் இருந்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகியோரை பிரித்து அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தியதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தூண்டுதல் இருப்பதாகத் தெரிகிறது என்றார்.
செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, CPM, Marxist Communist Party, OPS - EPS, Theni