அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் தங்கியிருந்த ஓ.பி.எஸ் சென்னைக்கு அவசர பயணம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை, தேனி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.அதனைத் தொடர்ந்து பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள இல்லத்தில் ஓ.பி.எஸ் தங்கியிருந்தார்.
இதனிடையேதலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10மணியளவில் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெறும் என நேற்று திடீரென அறிவிப்பு வெளியானது.
இதனால் இன்று பெரியகுளத்தில் இருந்து தனது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் சென்னைக்கு அவசரமாக கிளம்பி விட்டார். மதுரையில் இருந்து விமான மார்க்கமாக பிற்பகலில் சென்னைக்கு பயணம் செய்யும் ஓ.பி.எஸ் முன்னதாக மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் இல்ல நிகழ்வில் பங்கேற்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணி அல்லது 2மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைவார் எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.