Home /News /theni /

மது, கறி விருந்து படைத்து முத்துக்கருப்பண்ண சுவாமியை வழிபட்ட பக்தர்கள்

மது, கறி விருந்து படைத்து முத்துக்கருப்பண்ண சுவாமியை வழிபட்ட பக்தர்கள்

தேனி - சோணை முத்துக்கருப்பண்ண சுவாமி

தேனி - சோணை முத்துக்கருப்பண்ண சுவாமி

Theni | தேனி அருகே சனீஸ்வரர் பகவான் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சோணை முத்துக்கருப்பண்ண சுவாமிக்கு மது, கறி விருந்து படைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீசனீஸ்வரர் பகவான் திருக்கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் சனிவாரத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடித்திருவிழா இந்த ஆண்டு கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

    தொடர்ந்து ஆடி மாதத்தில்  சனிக்கிழமையன்று நடைபெற்ற திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சனீஸ்வரர் - நீலா தேவி திருமணம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்றும், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் ஆகஸ்ட் 6ஆம் தேதியும் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் சனி வாரத் திருவிழா நிறைவு பெற்றது.

    இந்நிலையில் விழாவின் இறுதியாக நேற்று அங்குள்ள சோணை முத்துக்கருப்பண்ண சுவாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்து படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் சுவாமிக்கு படையலாக படைக்கப்பட்டது.

    பக்தர்களுக்கு பிரசாதமாக அசைவ உணவுகள் அன்னதானம்


    மேலும் 25ஆடுகள், 45கோழிகள் பலி கொடுத்து சுவாமிக்கு கறி விருந்தும் படையலிடப்பட்டன. பக்தர்களுக்கு  அசைவ உணவுகள் அன்னதானமாக வழங்கப்பட்டது.

    மதுபாட்டில்கள் வைத்து படையல்


    Also see... எல்லை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை

    இந்த நிகழ்வை ஒட்டி சோணை முத்துக்கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

    செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple, Theni

    அடுத்த செய்தி