ஹோம் /நியூஸ் /தேனி /

சம்பள பணம் அனுப்பியதில் தகராறு.. பீகார் தொழிலாளி படுகொலை - மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்

சம்பள பணம் அனுப்பியதில் தகராறு.. பீகார் தொழிலாளி படுகொலை - மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்

கொலை வழக்கு 2 பேர் கைது

கொலை வழக்கு 2 பேர் கைது

தேனி மாவட்டத்தில் தனியார் பிளாஸ்டிக் ஆலையில் வேலை செய்து வந்த பீகார் தொழிலாளி படுகொலை.‌ உடன் பணிபுரியும் இரண்டு பீகார் தொழிலாளர்களை அடித்து கொலை செய்ததன் பின்னணி என்ன? 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள சாமிகுளம் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் உருக்கு ஆலை செயல்படுகிறது.‌ பழைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மறு சுழற்சி செய்யும் அந்த ஆலையில் வட இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.‌ இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலையில் தங்கியிருந்த வட இந்திய தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த பிரதீப் மன்ஜி (32) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

  பீகார் மாநிலம் நலந்தா மாவட்டம் மம்முடா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மன்ஜி. கடந்த சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் ஆலையில் கூலி வேலைக்கு சேர்ந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன் சம்பள பணத்தை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பப்புசிங்(44) என்பவர், நீ மட்டும் எப்படி உன் வீட்டிற்கு பணம் அனுப்பலாம். எனக்கும் பணம் தர வேண்டும் என பப்புசிங்-கிடம்  தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

  அனைவரும் மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது தகராறாக மாறி, பிரதீப் மன்ஜியை அங்கிருந்த கம்பியால் பப்புசிங் தாக்கினார். அப்போது உடனிருந்த நிதிஷ்குமார்(22) என்பவர் கத்தியால் பிரதீப் மன்ஜியை குத்தியதாக கூறப்படுகிறது.‌ இதில் மார்பு மற்றும் இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து பிரதீப் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

  Also Read:  மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

  தொழிலாளர்களிடையே உண்டான தகராறு சத்தத்தை கேட்ட ஆலையின் காவலாளி தர்மராஜ் (76) அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பீரதீப் மன்ஜியை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.‌ ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் மன்ஜி உயிரிழந்தார்.‌

  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ மேலும் இது தொடர்பாக ஆலை காவலாளி அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர் பப்புசிங், நிதிஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

  Also see... மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை..

  தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Theni