தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,297 ஆண்கள், 986 பெண்கள் என மொத்தம் 2,283 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக உடல் சோர்வுற்று காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்ததில் 7 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் 33 மாணவ-மாணவியருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து நோய்த்தொற்று பாதிப்படைந்த மாணவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை வரை அப்பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேனி பள்ளி
Must Read : எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை
இது தவிர அப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.