சென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை
ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

- News18 Tamil
- Last Updated: May 25, 2020, 11:22 AM IST
தமிழகத்தில் மே 24-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 765 தொற்றுகளில், 587 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 10,576 பேரில், 4781 பேர் குணமடைந்துள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில், நேற்று அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கம் 69 பேரும், தேனாம்பேட்டை 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறு 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
ராயபுரம் 1981
கோடம்பாக்கம் 1460திரு.வி.க.நகர் 1188
தேனாம்பேட்டை 1118
தண்டையார்பேட்டை 1044
அண்ணா நகர் 867
வளசரவாக்கம் 703
அடையாறு 579
அம்பத்தூர் 446
திருவொற்றியூர் 300
மாதவரம் 223
சோழிங்கநல்லூர் 173
பெருங்குடி 168
மணலி 142
ஆலந்தூர் 121
ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை ஆகிய நான்கு மண்டலங்களை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் தொற்று எண்ணிக்கை 1000-ஐக் கடந்துள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக தொற்று எண்ண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையின் பங்கு 72 சதவிகிதமாகவும், ஒட்டுமொத்தமாக இறப்பில் சென்னையில் இறந்தவர்களின் பங்கு 70.3 சதவிகிதமாகவும் உள்ளது.
சென்னையில் 60.02 சதவீதம் ஆண்கள், 39.96 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
வயது வாரியாக விபரம்:
ஆண்களில் 30-39 வயதுக்கு உட்பட்ட 1,421 பேரும், 20-29 வயதுக்கு உட்பட்ட 1,362 பேரும் பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 20-29 வயதுக்கு உட்பட்ட 919 பேரும், 30-39 வயதுக்கு உட்பட்ட 862 பேரும் பாதிக்கபட்டுள்ளனர் .
Also see...
சென்னையில், நேற்று அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கம் 69 பேரும், தேனாம்பேட்டை 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறு 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.