புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில முதியவர் கைது!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பதும், இவர் வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து இங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில முதியவர் கைது!
வடமாநிலத்து முதியவர் ஜெகதீஷ்
  • News18
  • Last Updated: April 16, 2019, 9:47 AM IST
  • Share this:
புதுச்சேரி சாரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் வடமாநிலத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி சாரம், தென்றல் நகரில் கடைவீதிக்கு சென்ற 10 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வடமாநில முதியவர் பிரசாதம் தருவதாககூறி அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பலமுறை கெஞ்சியும் அந்த நபர், விடுவிக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த சிறுமி வடமாநில முதியவரின் கையை கடித்துவிட்டு தப்பியுள்ளார்.


பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தை பெற்றோரிடம் கூறவே, அவர்கள் உடனே அங்கு சென்று வடமாநில தொழிலாளியை தட்டிக் கேட்டனர்.

அப்போது அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவரவே அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

பின்னர் அந்த முதியவரை பற்றி சிறுமியின் தந்தை கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்களது அறிவுரைக்கிணங்க அடுத்தகட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போலீசாரின் விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பதும், இவர் வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து இங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்தது தெரியவந்தது.

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானதால் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories