கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்

புதுச்சேரி முழுவதும் 108 ஆலயங்களின் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்
தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கட்சியினர்
  • Share this:
புதுச்சேரியில் கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் 108 கோயில்களில் தோப்புக்கரணம் போடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து சுமார் 60 நாட்களுக்கு மேலாக ஆலயங்கள் திறக்கப்படாமல் உள்ளது.

தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் இன்னும் ஆலயங்கள் திறக்கவில்லை. மதுபானக் கடையும், சாராயக் கடையும் திறக்கும் பட்சத்தில் ஆலயங்களை திறப்பதில் அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் நூதனமாக தோப்புகரணம் போடும் போராட்டத்தை இந்து முன்னணியினர் நடத்தினார்கள்.


புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் மாநில செயலாளர் சனில்குமார் போராட்டத்தை துவக்கி வைத்தார். புதுச்சேரி முழுவதும் 108 ஆலயங்களின் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.


Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories