ஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...!

கொரோனா ஊரடங்கால் திருமணங்கள் தடைபட்டதால் மணமக்களை அழைத்து வரும்  காரை ஜூஸ் கடையாக மாற்றியுள்ளார் ஓட்டுநர்.

ஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...!
மணமக்களை அழைத்து வரும் கார்
  • Share this:
புதுச்சேரி கென்னடி நகரில்  சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜ். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வழிபாட்டுத்தலங்கள், திருமணக் கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. திருமணக் கூடங்கள் மூடப்பட்டு திருமணங்கள் நிறுத்தப்பட்டன.

பல விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சவுண்ட் சர்வீஸ் நடத்துபவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் நாகராஜ் கடந்த இரண்டு மாதங்களாக விழாக்கள் இல்லாததால் தனது  கடையை மூடி உள்ளார்.

வருமானத்திற்கு வழியில்லாததால் மணமக்களை அழைத்து வரும் காரை ஜூஸ் கடையாக மாற்றி உள்ளார். காரின் மேல் பகுதியை கழற்றிவிட்டு அங்கு ஜூஸ் இயந்திரங்களை வைத்து ஜூஸ் விற்பனை செய்து வருகிறார்.


கொரோனா காலத்திற்குப் பிறகு இதனை மீண்டும் மணமக்களை அழைத்துச் செல்லும் கார் ஆக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். கொரோனாவில் சவுண்ட் சர்வீஸ் பாதிக்கப்பட்டு  குடும்பத்தை வறுமைக்கு செல்ல விடாமல் நம்பிக்கையுடன் தன்னிடம் இருக்கும் பொருளை கொண்டு மாற்று தொழிலுக்கு இவர் மாறியிருப்பது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading