முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / வாடகைக்கு வீடு கேட்டு மூதாட்டியிடம் கொள்ளை.. பாவமன்னிப்பு கேட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் கைது..!

வாடகைக்கு வீடு கேட்டு மூதாட்டியிடம் கொள்ளை.. பாவமன்னிப்பு கேட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் கைது..!

சென்னை திருட்டு

சென்னை திருட்டு

சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவது போல் நடித்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த இருவர் சிசிடிவியால் சிக்கியுள்ளனர். தாயின் சிகிச்சைக்காக பாவமன்னிப்பு கேட்டு கொள்ளையை அரங்கேற்றிய கொள்ளையன் சிக்கியது எப்படி?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணாதேவி, இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். 10 வீடுகள் உள்ள இவரது குடியிருப்பில் கீழ்தளத்தில் வீடு காலியாக இருந்துள்ளது. அதனை வாடகைக்கு விட "TOLET" பலகையை தொங்கவிட்டுள்ளார். அதை பார்த்த 2 பேர் கடந்த 31 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வீடு வாடகைக்கு கேட்டு வந்துள்ளனர். வீட்டின் வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையை குறைத்துக் கொள்ளுமாறு இருவரும் மூதாட்டியிடம் பேரம் பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்தவர்கள் திடீரென அந்த அறைக்குள் மூதாட்டியை தள்ளிச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

பின் இருவரும் மூதாட்டியின் காலில் விழுந்து பணத்தேவைக்காக கொள்ளை அடிப்பதாகக்கூறி பாவமன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சிறிது நேரத்தில் தெளிவான மூதாட்டி கதவை திறந்து வெளியெ வந்து தகவலைக் கூற அங்கு கூட்டம் கூடியது தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் இருவரின் அடையாளம் தெரிந்தது. அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை கோயம்புத்தூர் சென்று கைது செய்தனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கோவையை சேர்ந்த அஜீத் மற்றும் பிரபு என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளைக்கான பகீர் காரணம் தெரியவந்தது. அஜீத்தின் அம்மா டிபி நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்து வந்தார். பி- பாம் பட்டதாரியான அஜித்துக்கு போதிய வருமானம் கிடைக்காததால், மருத்துவ செலவிற்கு திணறி வந்தார். நண்பர் ஒருவர் நல்லவீடாக பார்த்து கொள்ளை அடிக்கலாம் என விளையாட்டாகக் கூற, அதனை சீரியசாக எடுத்துக் கொண்ட அஜீத் பணத்தேவைக்காக கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

' isDesktop="true" id="887192" youtubeid="5v7deOftv4I" category="thanjavur">

தன்னுடன் லோடு மேனாக இருக்கும் பிரபுவிற்கும் 70 ஆயிரம் கடன் இருப்பதால் அவரையும் துணைக்கு அழைத்து கொண்டு சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதிக்கு வந்துள்ளர். கடந்த 15 நாட்களாக நோட்டம் விட்டு அந்த வீட்டில் கொள்ளை சம்பவத்தை நடத்தியதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளர். இருவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News, Theft