தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டில் கழிவு நீர் தொட்டிக்காக சிமெண்ட் உறைகளை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது.
மண் தோண்டும் பணியில் பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் (45) உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 15 அடி ஆழம் மண் தோண்டியபோது, சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து கூடை மூலம் மேலே அனுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தார். உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் சித்திரவேல் மீது இருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பேராவூரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் வீரர்கள் ஏ.சுப்பையன், கே.நீலகண்டன், எம்.ரஜினி, ஆர்.ராஜூவ்காந்தி, அ.மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மண்ணுக்குள் சிகிச்சை கொண்ட சித்திரைவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின் சித்திரவேல் உயிருடன் மீட்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.