Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

உதயநிதி அமைச்சராவதில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? - சந்தேகம் கிளப்பும் டிடிவி தினகரன்!

உதயநிதி அமைச்சராவதில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? - சந்தேகம் கிளப்பும் டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன் - உதயநிதி ஸ்டாலின்

டிடிவி தினகரன் - உதயநிதி ஸ்டாலின்

விடியல் ஆட்சி தருவதாக கூறிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சியாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

”உதயநிதி நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் அவசரம் காட்டுவது ஏன்? ” என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி  தினகரன் இன்று தனது 60 வது பிறந்தநாளை தஞ்சையில் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தீய சக்தி திமுகவை எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும். தனித்தனி கட்சியாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் உண்மையான தொண்டர் இல்லை, என்பதை பலமுறை நிரூபித்துள்ளார் என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  உதயநிதி அமைச்சராவதுதான் திராவிட மாடல் : தமிழிசை விமர்சனம்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்த கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் அவர் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இதில் முதலமைச்சர் அவசரம் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை. இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என கூறினார்.

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என ஸ்டாலின் பேசியது குறித்து பதிலளித்த அவர், “புதுச்சேரி தமிழகத்திற்கு பக்கத்தில் தான் உள்ளது. இங்கு நடப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அதனால் புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. விடியல் ஆட்சி வருவதாக சொல்லிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சியாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

First published:

Tags: Minister, TTV Dhinakaran, TTV Dinakaran, Udhayanidhi Stalin