ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

100நாள் வேலை பார்த்துக்கொண்டே குரூப் 2 தேர்வு.. பார்வை குறைபாட்டுடன் 55 வயதில் தீவிரமாய் படிக்கும் முதியவர்!

100நாள் வேலை பார்த்துக்கொண்டே குரூப் 2 தேர்வு.. பார்வை குறைபாட்டுடன் 55 வயதில் தீவிரமாய் படிக்கும் முதியவர்!

தஞ்சையில் குரூப் 2 தேர்வில் தேர்வான 55 வயதானவர்

தஞ்சையில் குரூப் 2 தேர்வில் தேர்வான 55 வயதானவர்

நூறு நாள் வேலைகளின் ஒய்வு நேரத்தில், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 65 வயது மூதாட்டி படிக்க, கண்பார்வை இழந்த 55 வயது முதியவர் கேட்டு, குரூப் 2 தேர்வை முதல் முறையாக எழுதி தேர்ச்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் மேல் உளூர் அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பிறவியிலேயே பார்வைத்திறன் இழந்த இவர், பிஎஸ்சி படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க இயலாமல் விவசாய கூலியான ரவிச்சந்திரன், தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 2ல் தேர்வு எழுத வேண்டுமென ரவிச்சந்திரனுக்கு ஆசை தோன்ற அதற்காக பயிற்சி எடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற ரவிச்சந்திரன் நூறு நாள் வேலையின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடன் பணியாற்றுவோரை படிக்க சொல்லி கேட்டு கேட்டு திறனை வளர்த்துள்ளார் . இந்த பார்வை மாற்றுத்திறனாளிக்கு 9 ம் வகுப்பு தோழியும், 100 நாள் வேலையில் சக தொழிலாளியுமான பத்மாவதியும் கல்வி கற்க பெரிதும் உதவியுள்ளனர்.

Also see... சாலையில் நடந்த விபத்து.. காரை நிறுத்தி உதவி செய்த அமைச்சர்!

100 நாள் வேலை பார்த்துக்கொண்டே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 2 மெயின் தேர்வுக்காக தயாராகி வரும் ரவிச்சந்திரன், எப்படியும் தேர்ச்சியடைந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

' isDesktop="true" id="841143" youtubeid="-gH4kujlzXs" category="thanjavur">

தற்போது ரவிச்சந்திரனுக்கு 55 வயதாகும் நிலையில் வெற்றி பெற்று வேலைக்கு வந்தாலும் குறுகிய காலமே பணியாற்ற முடியும். ஆனாலும் வேலையில் இருக்கும் காலத்தில் மக்களுக்கு உதவுவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த தன்னம்பிக்கை மனிதர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Group 2, Thanjavur, TNPSC