Home /News /thanjavur /

விசிக பிரமுகர் காருக்கு தீ வைப்பு.. அதிமுக பிரமுகரின் ஆட்டோக்கள் சூறையாடல்.. கும்பகோணத்தில் பரபரப்பு

விசிக பிரமுகர் காருக்கு தீ வைப்பு.. அதிமுக பிரமுகரின் ஆட்டோக்கள் சூறையாடல்.. கும்பகோணத்தில் பரபரப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் காருக்கு தீ வைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் காருக்கு தீ வைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் காருக்கு தீ வைப்பு. அதிமுக நிர்வாகி தான் காரணம் என கூறி அவருக்கு  சொந்தமான இரண்டு ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளராக அலெக்ஸ் என்பவர் உள்ளார். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கில் ஒன்றில் ஆஜர் ஆவதற்காக நீதிமன்றம் அருகே உள்ள கதர் கிராம தொழில் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தனது காரினை நிறுத்தி வைத்து நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.

அப்பொழுது திடீரென  இவரது கார் தீ பற்றி எரிந்தது. தகவலயறிந்த  தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து எரிந்த காரினை அணைத்தனர். இந்நிலையில் ஏற்கனவே அலெக்ஸ்க்கும், அதிமுகவை சேர்ந்த சேவல் ராஜா என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

Also see... நல்லம்பள்ளி வனப்பகுதியில் இரண்டு சடலம் மீட்பு..விசாரணையில் காவல்துறை..

சேவல் ராஜாதான் அலெக்ஸ் காரை தீ வைத்து எரித்திருக்கலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் சேவல் ராஜாவிற்கு சொந்தமான 2 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து பாத்திமாபுரம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Crime News, Kumbakonam, Thanjavur, VCK

அடுத்த செய்தி