ஹோம் /நியூஸ் /Thanjavur /

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும் என்பதால் கலந்து கொண்டேன் - உதயநிதி ஸ்டாலின்

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும் என்பதால் கலந்து கொண்டேன் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin : கும்பகோணத்தில் கட்டட அடிக்கல் நாட்டுவிழா பூஜையில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும் என்பதால் இந்த பூஜைகளில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில், அரசு போக்குவரத்து கழக எதிரில் கருணாநிதியின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் இளைஞரணி சார்பில் மூர்த்தி கலையரங்கத்தில் 320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட, ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது.

இதைப் பார்த்து மதவாத சக்திகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன்.

எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை.

திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால், அதற்கு முன்பே மூத்த உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து 320 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்துகொண்டிருந்தார்.

Must Read : கல்லூரிகால நினைவுகளோடு அமைச்சர்களின் கல கல பேச்சு.. திருச்சி கல்லூரியில் சிரிப்பலை

மேலும், மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், துரை சந்திரசேகர், டிகேஜி நீலமேகம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், துணை மேயர் சு.ப.தமிழழகன் இளைஞரிணி மாவட்ட அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி, தஞ்சை மேயர் சன்.ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: DMK, Kumbakonam, Thanjavur, Udhayanidhi Stalin