Home /News /thanjavur /

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலைப் போல் செயல்படுவோம் - டிடிவி.தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலைப் போல் செயல்படுவோம் - டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன்

அரசியல் ரீதியாக யாருடனும் எந்த , கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிச்சாமி உடன் எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. அவருடைய குணாதிசயங்களை தான் கண்டிக்கிறேன் என தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலைப் போல் செயல்படுவோம் என்றும் 2023 இறுதியில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் கூறிய கருத்தை ஏற்கனவே வரவேற்றுள்ளேன். அதே சமயம் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள், நல்ல விஷயங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற நோக்கத்தில் பன்னீர்செல்வமும் வைத்தியலிங்கமும் கூறிய கருத்தை வரவேற்கிறேன் என கூறினார்.

மேலும், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான், இவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வைத்திலிங்கம் ஆரம்பத்தில் இருந்து உள்ளார். என்னை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகும் அவர் தொடர்ந்து கட்சியில் இருப்பதால், அங்கு நடந்த விஷயங்கள் அவருக்கு தெரியும். எனவே வைத்திலிங்கம் நேரம் வரும்போது கூறுகிறேன் என கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒரு அணிலை போல் செயல்படுவோம்.

சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு நல்லது. அதே நேரத்தில் ஆட்சிக்கு வருவதற்காக, மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து மக்கள், திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக, செயல்படுகின்றனர். இதற்கான பலனை திமுக நாடாளுமன்ற தேர்தலில் அனுவிப்பார்கள். அமமுகவிற்கு அரசியல் ரீதியாக யாருடனும் எந்த , கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிச்சாமி உடன் எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. அவருடைய குணாதிசயங்களை தான் கண்டிக்கிறேன். தமிழக மக்களின் நலம்தான் எங்களுக்கு முக்கியம்.

ALSO READ | சமதர்ம சமுதாயம் அமைப்பதே இலக்கு - கோவை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை 2023 இறுதியில் முடிவு செய்வோம். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கும் போது இருந்த சட்ட திட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு தான் சரியானது. அந்த தீர்ப்பு தான் உச்ச நீதிமன்றம் வரை சரியாக சொல்லும் என என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். யார் எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம் நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க செயல். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. வருங்காலங்களில் அதற்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள் என  அவர் தெரிவித்தார்.

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Thanjavur, TTV Dhinakaran

அடுத்த செய்தி