ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

பணம்தர மறுத்த கடைக்காரர்.. பழங்களை சாலையில் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்..!

பணம்தர மறுத்த கடைக்காரர்.. பழங்களை சாலையில் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்..!

ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்

ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்

பணம் தர மறுத்ததால் பழங்களை சாலைகளில் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

பழக்கடைக்காரர் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் திருநங்கைகள் பழங்களை சாலைகளில் தள்ளிவிட்டு  ரகளையில்  ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநங்கைகள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. அவர்களுக்கென்ற ஒரு அடையாளத்தை பெற கல்வி சார்ந்தும் தொழில் சார்ந்தும் பல வகைகளில் அவர்களே அவர்களை மெருகேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் பல திருநங்கைகள் தங்களுக்கென்று வாய்ப்புகள் கிடைக்காமலும் விழிப்புணர்வு இல்லாமலும் பணம் கேட்டு கடைகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அது மாதிரி அவர்கள் செல்லும் போது யார் மீது சரி, தவறு என்பதை தாண்டி ஏதேனும் சண்டை சச்சரவுகள் போன்றவை நடைப்பெறுவதும் வழக்கமாக உள்ளது. அப்படி பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருவதையும் நாம் கண்டிருப்போம். அப்படியொரு நிகழ்வு தான் இப்பொது நடைப்பெற்றிருக்கிறது.

தஞ்சாவூர் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவில் முண்டாசுராமு பழக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  நேற்று மதியம் இந்த பழக்கடைக்கு வந்த இரண்டு திருநங்கைகள் அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த முதியவர் முதலாளி இல்லை என்றும், அதனால் பணம் தர முடியாது எனவும் கூறியுள்ளார்.

Read More :பொய்த்து போன மழை - விலைக்குத் தண்ணீர் வாங்கி பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள்

இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் அந்த முதியோவரிடம் தகராறு செய்துள்ளனர். இருவருக்கும் தகராறு முற்றவே,  ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் பழக்கடையில் இருந்த பழங்களை சாலைகளில் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Thanjavur