தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சத்யா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சத்யாவின் பெற்றோர்கள், மற்ற பெற்றோர்கள் போல் அவரை புறக்கணிக்காமல், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் சத்யாவை விலக்கி வைக்காமல் அன்பு காட்டி அவரை வளர்த்து வந்துள்ளனர்.
இவை எல்லாம் யாரும் சமம் என்ற கருத்தும், உலக நிலையைச் பற்றிய புரிதலும் சத்தியாவுக்கு உருவாக காரணமாயிருந்ததது. சக திருநங்கைகள் உடன் பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றி தூய்மை பணி செய்துள்ளார். இதேபோல் பிளாஸ்டிக் இல்லாத நகரம் திட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திய, பின்னர் வீசி சென்ற பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகளை பரிசோதனைக்கு அழைத்து செல்வது. உணவு மற்றும் மருந்துகள் வழங்குவது போன்ற சேவை புரிந்துள்ளார். இவரின் சமுக பணி அறிந்த, பாண்டிச்சேரியில் உள்ள குளோபல் ஹுயூமன் பீஸ் யூனிவர்சிட்டி (Global Human Peace University) திருநங்கை சத்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவம் அளித்து உள்ளது.
Also see... விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வரலாறு தெரியுமா?
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான் படித்து பட்டம் பெற முடியாவிட்டாலும், இந்த டாக்டர் பட்டம் மூலம் என் பெயருக்கு முன்னால் Dr என போட்டு கொள்வது பெருமையாக சந்தோஷமாக இருக்கிறது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் திருநங்கை சத்யா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thanjavur, Transgender