முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோலப் போட்டி... தஞ்சையில் கலக்கிய பெண்கள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோலப் போட்டி... தஞ்சையில் கலக்கிய பெண்கள்

கோலம் போட்டி

கோலம் போட்டி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தஞ்சையில் கோலப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தஞ்சையில் நடைபெற்ற கோலப்போட்டியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் போலியான வீடியோக்கள் பரப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள புலம்பெயர்தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும், போலிச் செய்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்களும், தமிழக மக்களும் சகோதர சகோதரிகள் போல் வாழ்வதாகவும், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை அருகே விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

Also Read : ஏ4 தாளில் 135 கோவில்களை வரைந்து உலக சாதனையில் இடம் பிடித்த தஞ்சை கல்லூரி மாணவி!

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களது கோலங்களை வரைந்து அசத்தினர். இந்தக் கோலத்தில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”,”வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” உள்ளிட்ட வாசங்கள் இடம் பெற்றிருந்தன. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்த கோலப்போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kolam, Migrant Workers, Thanjavur