ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சாலை விபத்து

சாலை விபத்து

Thanjavur | சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து விபத்துள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில்  சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த  அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த  பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 17 பேருக்கு லேசான காயமும் பேருந்து ஓட்டுனர் கர்ணாமூர்த்தி, நடத்துனர் கார்த்திகேயன், பயணிகள் ரமேஷ், கீர்த்திகா விஜயலட்சுமி, சந்திரசேகர், தமிழ்செல்வி ஆகிய 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Also see...சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..!

உடனே அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் ஏற்பட்ட 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழபுரம் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus accident, Chennai, Government, Thanjavur