ஹோம் /நியூஸ் /Thanjavur /

கல்லணையில் மிதந்த சடலம்.. பழிக்குப் பழியாக 4 ஆண்டுகள் காத்திருந்து ரவுடி கொலை..

கல்லணையில் மிதந்த சடலம்.. பழிக்குப் பழியாக 4 ஆண்டுகள் காத்திருந்து ரவுடி கொலை..

பழிக்கு பழிவாங்கும் நோக்கில் 4 ஆண்டுகள் காத்திருந்து கொலை அரங்கேற்றியுள்ளனர் குற்றவளிகள். ரவுடிகளுக்குள் நிகழ்ந்த மோதல் பின்னணி என்ன?

பழிக்கு பழிவாங்கும் நோக்கில் 4 ஆண்டுகள் காத்திருந்து கொலை அரங்கேற்றியுள்ளனர் குற்றவளிகள். ரவுடிகளுக்குள் நிகழ்ந்த மோதல் பின்னணி என்ன?

பழிக்கு பழிவாங்கும் நோக்கில் 4 ஆண்டுகள் காத்திருந்து கொலை அரங்கேற்றியுள்ளனர் குற்றவளிகள். ரவுடிகளுக்குள் நிகழ்ந்த மோதல் பின்னணி என்ன?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தஞ்சையில் பழிக்குப் பழியாக ரவுடியை கடத்திச் சென்று கல்லணை கால்வாயில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது ஒரு கும்பல். ரவுடி கொலையின் பின்னணி என்ன?

தஞ்சாவூர், கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் 30 வயதான மனோகரன் இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனோகரனை, சிலர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மனோகரனின் தாய் வாசுகி தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மனோகரனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், காயங்களுடன், கல்லணைக் கால்வாயில் மனோகரனின் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2018 ம் ஆண்டு எலும்பு தினேஷ் என்ற ரவுடியின் தம்பி தமிழ்செல்வனை கடத்தி சென்று கல்லணை கால்வாயில் அழுத்தி மானோகரன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எலும்பு தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் இளனி மணிகண்டன், கிரண் ஆகியோர் மனோகரன் மீது விரோதத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் கடந்த வாரம் நீதிமன்றம் வந்தபோது ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி ஒரு துக்க வீட்டில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அன்று இரவு மனோகரன், இளனி மணிகண்டனுக்கு போன் செய்து உன்னை கொலை செய்ய உன் ஏரியாவிற்கே வந்து கொண்டிருக்கிறேன் என கெத்தாக பேசி அந்த பகுதிக்கு சென்றதாகத் தெரிகிறது. இதற்காகவே காத்திருந்த இளனி.மணிகண்டன், கிரண், விஜய் ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு மனோகரனை கடத்தி சென்று கொலை செய்து கல்லணை கால்வாயில் பழி தீர்த்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மானோகரனை கொலை செய்த மூன்று பேரையும் போலீசார் தேடிவந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த இளநி.மணிகண்டன், கிரண், விஜய் ஆகிய மூன்று பேரும் பாபநாசம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

First published:

Tags: Crime News, Murder