ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

நகை கடனை தள்ளுபடி செய்யாமலேயே கையெழுத்து கேட்ட வங்கி ஊழியர்கள்.. விவசாயிகள் அதிர்ச்சி!

நகை கடனை தள்ளுபடி செய்யாமலேயே கையெழுத்து கேட்ட வங்கி ஊழியர்கள்.. விவசாயிகள் அதிர்ச்சி!

தஞ்சை விவசாயிகள்

தஞ்சை விவசாயிகள்

சம்பந்தபட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நகை கடன்களை தள்ளுபடி செய்தும், விவசாய கடன்களை வழங்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thanjavur | Thanjavur

  தஞ்சை அருகே தாமரங்கோட்டை கூட்டுறவு வங்கியில் நகை கடனை தள்ளுபடி செய்யாமலேயே விவசாயிகளிடம் நகை கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக வீடு தேடி வந்து கையெழுத்து கேட்டதாக வங்கி ஊழியர்கள் மீது விவசாயிகள் புகாரளித்துள்ளனர்.

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அருகே உள்ள தாமரங்கோட்டை கிராமத்தில் உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி.

  இந்த கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கான நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்று வருவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் நகை கடன் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டது.

  இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்த விவசாயிகளின் நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

  இந்த நிலையில் தாமரங்கோட்டை கூட்டுறவு வங்கியில்  ஏழு விவசாயிகளின் நகைகளை தள்ளுபடி செய்யாமல் கூட்டுறவு சங்க  ஊழியர்களின் உறவினர்களுக்கும்,  அவர்களுக்கு நெருக்கமானவர்களில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும், அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் ஒருதலைப் பட்சமாக நகை கடன்களை தள்ளுபடி செய்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  அதேபோல தள்ளுபடி செய்யாத விவசாயிகளிடம்  வீடு தேடி சென்று கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகையை தள்ளுபடி செய்து விட்டதாக,  நகைகளை அடகு வைத்த  விவசாயிகளிடம்  கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்திவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இதையும் படிங்க | தஞ்சாவூரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்.. அகல் விளக்குகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!

  இதைப் போலவே விவசாய கடன்களுக்கு மனு அளித்தவர்களுக்கு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் விவசாய கடன் வழங்கிவிட்டு வேண்டாதவர்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி புறக்கணித்து வருவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

  இது தொடர்பாக இப்பகுதி விவசாயிகள் இந்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகள் இடத்தில் முறையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் கூட்டுறவு வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அப்படி இருந்தும் அந்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  எனவே சம்பந்த பட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நகை கடன்களை தள்ளுபடி செய்தும், விவசாய கடன்களை வழங்குமாறு இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். இந்தக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வரும் சியாமளா என்பவர் மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலம் வழங்கிவரும் தொகையை தொடர்ந்து பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cheating, Thanjavur