தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் நந்தகுமார் (22), எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்து முடித்துவிட்டு அலுமினிய தொழிற்சாலை பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் இவர் KTM பைக் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். மேலும் அதற்கான Quotation வாங்கியுள்ளார். ஆனால் பைக்கின் விலை 1.5 லட்சத்துக்கு மேல் உள்ளதால், அன்றாட கூலி வேலை செய்யும் தந்தையால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாததால், பைக் வாங்கி தருகிறேன் என காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் பைக் வாங்கித்தர தாமதம் ஆனதால், விரக்தி அடைந்த நந்தகுமார் கடந்த 27ஆம் தேதி கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க் ஷேக்கில் கலந்து குடித்துள்ளார். மேலும் அதனை செல்ஃபியாக வீடியோவிலும் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நந்தகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
. ஏழை பெற்றோர்களால் பைக் வாங்கி தாராத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Thanjavur, Youth dead