Home /News /thanjavur /

Thanjavur : பேருந்து நிறுத்தம் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்: சாலையிலேயே நிற்கும் அவலம்.

Thanjavur : பேருந்து நிறுத்தம் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்: சாலையிலேயே நிற்கும் அவலம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur District : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மருங்குளம் அருகே பாச்சூர் எனும் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் இல்லாததால் சாலை ஓரங்களிலேயே பேருந்துக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மருங்குளம் அருகே பாச்சூர் எனும் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் இல்லாததால் சாலை ஓரங்களிலேயே பேருந்துக்காக  கிராம மக்கள்‌ காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது..   இதுகுறித்து பாச்சூர் கிராம ஊராட்சி தலைவரிடம் விசாரித்தபோது, தற்போது நடவடிக்கை‌  எடுக்கபடவில்லை, பின்வரும் காலங்களில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இது குறித்து அக்கிராம மக்களிடம்  விசாரித்த போது பேருந்து நிறுத்தம் இல்லாததால் சாலை ஓரங்களிலிலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டும் மற்றும் நிற்க இடம் இல்லாததால் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி இருப்பதாக கூறுகிறார்கள்.

    மேலும் அந்த இடத்தில் அரசு பள்ளி இருப்பதால் பள்ளி முடிந்ததும் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியூருக்கு பேருந்தில் பயணம் செல்வதற்கு அந்த சாலையில் நின்று கொண்டிருப்பதால் பள்ளி காலங்களில் மிகவும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாகவும்  கூறுகிறார்கள் அந்த கிராம மக்கள். மேலும், பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான இடவசதி அதிகம் இருந்தும், அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்காதது ஏன் என இதுவரை தெரியவில்லை என கிராம மக்கள் புலம்புகின்றனர்.

    கிராம ஊராட்சி தலைவர் விரைவில் சரி செய்ய வழிவகுப்பதாகவும் கூறுகிறார். ஆனால், இதற்கு முன்னால் இருந்த கிராம ஊராட்சி தலைவர்கள் எவரும் இதுவரை பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்த நிலை மிகவும் வேதனையளிக்கின்றது எனவும் கூறுகின்றனர்.

    அந்த கிராமத்தில் ஏற்கனவே ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. ஆனால் அந்த பேருந்து நிறுத்தமானது அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இது வரை அந்த பேருந்து நிறுத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வராததால் சேதமடைந்துள்ளதாவும் அந்த பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்தில் பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் அதன் பக்கத்து இடத்தில் நிறுத்துகிறார்கள். அந்த பேருந்து நிறுதத்தை அன்றே இந்த இடத்தில் அமைத்திருந்தால், சரியானதாக இருந்திருக்கும் எனவும் கூறுகிறார்கள்.

    பேருந்து நிறுத்தம் இருப்பது ஒரு இடமாகவும், பேருந்தை நிறுத்துவது ஒரு இடமாகவும் இருக்கிறது. இதனால் ஒரு ஒழுங்கு முறையின்மை இந்த கிராமத்தில் காணப்படுகிறது எனவும் கூறுகிறார்கள்.
    மேலும், சுற்றியிருக்கும் 3 கிராமங்களுக்கு அதிக அளவில் பேருந்து வசதி இல்லாததால், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாச்சூர் எனும் கிராமத்திற்கு வந்து தான் பயணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது எனவும் எனவே அந்த பகுதியில் ஒரு முக்கியமான ஒரு கிராமமாக இருந்தும் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என வேதனையுடன் கூறுகின்றனர் அந்த கிராம மக்கள்.

    பேருந்து நிறுத்தம் இல்லாததால் கடை ஓரங்களிலும் சாலையோரங்களிலும் பேருந்துக்காக காத்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பேருந்து நிறுத்தம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அந்த கிராம மக்கள் கருதுகின்றார்கள்.

    செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tanjore

    அடுத்த செய்தி