ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

கம்ப்யூட்டரை இயக்க மவுஸ் வேண்டாம்..! கண் போதும்... பட்டுக்கோட்டை மாணவர்களின் அசத்தல் கண்டுப்பிடிப்பு..!

கம்ப்யூட்டரை இயக்க மவுஸ் வேண்டாம்..! கண் போதும்... பட்டுக்கோட்டை மாணவர்களின் அசத்தல் கண்டுப்பிடிப்பு..!

மாணவர்கள் கிஷோர் மற்றும் சிவ மாரிமுத்து

மாணவர்கள் கிஷோர் மற்றும் சிவ மாரிமுத்து

ஏடிஎம் மையங்களில் திருட வரும் தனிப்பட்ட மனிதனின் தரவுகளை விழித்திரை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க உதவும். மேலும் இதை மேம்படுத்தி தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் வகையிலும் புது விதமான வசதிகளுடன் உருவாக்குவோம் என மாணவர்கள் நம்பிக்கை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்கள் அறிவியல் கண்காட்சி பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 10.11.2022 அன்று 12 மணியளவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.ஸ்ரீவித்யா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 7,500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 கல்வி நிறுவனங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்களுடைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1,065 போஸ்டர்கள், திட்ட ஆய்வுகளை கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாரட்டி துணைவேந்தர் பாராட்டினார்.

அப்போது பேசிய அவர், ‘மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். நவநாகரிக உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். தொழில் புரட்சியில் அறிவியல் முன்னேற்றம் வேண்டும். அறிவியலையும், மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வதைபோல் கனவை நனவாக்க வேண்டும். பெரியாரின் வாழ்வியலை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் கிஷோர் மற்றும் சிவ மாரிமுத்து ஆகிய இரண்டு மாணவர்களும் இணைந்து கணினியைத் தொடாமலேயே கண்ணாலேயே இயங்க வைக்கும் கண்டுபிடிப்பை செய்துள்ளனர்..

இது குறித்து பேசிய மாணவர்கள், ‘நாங்க இருவரும் புதுசா எதாச்சும் கண்டுபிடிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தினோம். அப்போது தான் பைத்தான் என்ற கோடிங் பற்றி தெரிந்து கொள்வதற்காக யூடீபில் பார்த்து கற்றுக் கொண்டோம். பின்பு மாற்று திறனாளிகள் மற்றும் பல இடங்களில் நல்ல விஷயத்திற்காக பயன்படும் வகையில் இந்த ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். இது முழுக்க முழுக்க எங்களின் தனிப்பட்ட கோடிங் ஆகும். இதை செய்ய ஒரு மாதம் காலம் ஆனது.

ஆரம்பத்தில் எரெர்ஸ் இருந்தாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இதை சரி செய்து உருவாக்கியுள்ளோம். இதை ஏடிஎம் மையம் மற்றும் ராணுவ பாதுகாப்பிற்காக கூட பயன்படுத்தலாம். ஏடிஎம் மையங்களில் திருட வரும் தனிப்பட்ட மனிதனின் தரவுகளை விழித்திரை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க உதவும். மேலும் இதை மேம்படுத்தி தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் வகையிலும் புது விதமான வசதிகளுடன் உருவாக்குவோம் என்று கூறினார்கள்.

First published:

Tags: Student, Thanjavur