ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தாய், தந்தையை கொன்றுவிட்டு சடலத்தோடு 2 நாட்கள் வீட்டில் தூங்கிய மகன்.. தஞ்சையில் அதிர்ச்சி!

தாய், தந்தையை கொன்றுவிட்டு சடலத்தோடு 2 நாட்கள் வீட்டில் தூங்கிய மகன்.. தஞ்சையில் அதிர்ச்சி!

கொலை செய்யப்பட்டவர்கள்

கொலை செய்யப்பட்டவர்கள்

இருவரையும் கொன்றுவிட்டு எதுவும் தெரியாதது போல், சடலத்தோடு 2 நாட்கள் உறவாடி வந்த மகனை போலீசார் கைது செய்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் அருகே தாய், தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்கள்  பிரேதத்துடன் சமைத்து சாப்பிட்டு வந்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி (73). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு  மகள் இருந்தனர்.

இதில் மூத்த மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயர்ந்துள்ளார்‌. மேலும் மகளும் திருமணம் ஆகி இறந்துவிட்டார். இதனால் மகன் ராஜேந்திரனுடன் (45) பெற்றோர்கள் இருவரும் தில்லையம்பூரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திரனுக்கு திருமணமாகாததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தாய், தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு தாய், தந்தையுடன் தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தாய் தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க | WATCH - சொத்து பிரச்னை.. மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்!

இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களில் சடலத்தை வீட்டிலேயே வைத்துள்ளார். எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாதவாறு வீட்டில் சடலத்தோடு சமைத்து சாப்பிட்டு உலாவி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, கோவிந்தராஜ் - லட்சுமி தம்பதியினர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், மகன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்தியாளர் : எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

First published:

Tags: Crime News, Double murder, Local News, Thanjavur