Home /News /thanjavur /

Thanjavur | கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருக்கும் பள்ளிக் கட்டிடம்- மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம்

Thanjavur | கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருக்கும் பள்ளிக் கட்டிடம்- மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம்

தஞ்சாவூர் பள்ளி

தஞ்சாவூர் பள்ளி

Thanjavur News | தஞ்சாவூரில் பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

தஞ்சை அருகே பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை திறக்காத நிலையில் மாணவர்கள் மரத்தடி நிழலிலும் பள்ளி வராண்டாவிலும் ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்டு பயின்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டானை கோட்டை வடக்கு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தமாக 300 மாணவர்கள் கல்வி பயின்று வரும் ‌நிலையில் இரண்டு கட்டிடங்கள் மட்டுமே இந்த 300 மாணவர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் ஒரு கட்டிடமானது பழுதடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக 2020-2021 விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு சீரமைப்பு திட்டத்தின் கீழ் 17.32 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்ட பணிகள் முழுவதும் முடிந்த நிலையில், இதுவரை அந்த கட்டிடமானது திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வகுப்பறை நடத்த இடமில்லாமல் மரத்தடி நிழலிலும் புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் வராண்டாவில் வகுப்பறை நடத்தப்படட்டு மாணவர்கள் அங்கேயே படித்தும் வருகின்றனர்.

தஞ்சாவூர் பள்ளி


மேலும் பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை இடிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை அந்த கட்டிடமானது கட்டப்படாமல் உள்ளது. மேலும் பள்ளியின் சத்துணவு மையத்தின் கதவுகளும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை விரைவில் திறந்து வைக்கவும் மேலும் இடிக்கப்பட்ட நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை கட்டித் தரவும் சேதமடைந்துள்ள சத்துணவு கூடத்தின் கதவினை மாற்றித் தரவும் நாட்டாணி கோட்டை பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பேராவூரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில், இந்நிலை குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை‌ மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி