முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தஞ்சாவூரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்.. அகல் விளக்குகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!

தஞ்சாவூரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்.. அகல் விளக்குகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!

தஞ்சாவூர் மண்பாண்ட தொழிலாளர்கள்

தஞ்சாவூர் மண்பாண்ட தொழிலாளர்கள்

அரசு களிமண் எளிதாக கிடைத்திட உதவ வேண்டும் என்றும், பண்டிகை காலங்களில் மாவட்ட நிர்வாகமே மண் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை.

  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

கார்த்திகை தீப திருநாள் நெருங்குவதையொட்டி, விளக்குகளை கொள்முதல் செய்ய தஞ்சை மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகை பண்டிகை வரும் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இங்கு ஒரு முகம் கொண்ட விளக்குகள், ஐந்து முகம் கொண்ட அகல் விளக்குகள், ஏழு முகம் கொண்ட விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் விளக்குகளை செய்து வருகின்றனர்.

இது குறித்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில் ஏரி, குளங்களில் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தாலும், களிமண்ணை எடுக்க அனுமதிப்பதில்லை, இதனால் தனியார் நிலங்களில் ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து மண் அள்ளுவதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள், தரமான மணலும், மற்ற பொருள்களும் யானை விலை, குதிரை விலையாக உயர்ந்துவிட்டது. ஒரு அகல் விளக்கு உற்பத்தி செய்ய 60 முதல் 70 காசுகள் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது.

ஆனால் வியாபாரிகள் எங்களிடம் ஒரு அகல் விளக்கை 80 காசுக்கு வாங்கிச் சென்று  சந்தையில் மூன்று விளக்குகள் 10 ரூபாய்க்கு என விற்கிறார்கள். இதனால் வியாபாரிகள் தான் லாபம் அடைகின்றனர் இதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க | தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்

மேலும் பீங்கானால் செய்யப்பட்ட அகல் விளக்கு மற்றும்  மெழுகுவர்த்தி அகல் விளக்காலும் தங்களது பாரம்பரிய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இப்பகுதியில் இத்தொழிலை நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வந்தனர். ஆனால் போதிய வருமானம் இல்லாததால், கூலி வேலைக்கு சென்று விட்டனர். தற்போது இந்த தொழில் அழியாமல் இப்பகுதியில் சுமார் பத்து குடும்பத்தினர் மட்டுமே செய்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு களிமண் எளிதாக கிடைத்திட உதவ வேண்டும் என்றும், பண்டிகை காலங்களில் மாவட்ட நிர்வாகமே மண் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குநிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

    First published:

    Tags: Deepam festival, Karthigai Deepam, Thanjavur